விழுப்புரம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள்: கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு



விழுப்புரம், ஜன. –


விழுப்புரம் மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் விழுப்புரம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.148 இலட்சம் மதிப்பீட்டில் பழைய நகராட்சி அலுவலகத்தை புனரமைத்து திருமணம் மண்டபம், வணிக வளாகம் அமைப்பட்டு வருவதையும், இதில் தரை தளத்தல் 6 வணிக வளாக கடைகள், முதல் தளத்தில் திருமணம் மண்டபம் மணமகன் அறை, மணமகள் அறை, ஆண், பெண் சுகாதார வளாகம், 300 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.


திருப்பாச்சனூர், மலட்டாற்றிலிருந்து கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.88 கோடி மதிப்பீட்டில் கீழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருவதையும், 5 ஆழ்துளை கிணறும், 5.4 கி.மீ. தூரம் குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சாலமேடு பகுதியில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, இப்பணியினை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.


இவ்வாறு அவர் கூறினார்.


இந்த ஆய்வில் விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர்.வசந்தி, நகராட்சி பொறியாளர் புவனேஷ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%