ஜெர்மனி கண்காட்சியில் 100 இந்திய நிறுவனங்கள் பங்கேற்க கைத்தறி ஜவுளி ஏற்றுமதி கவுன்சில் ஏற்பாடு
சென்னை, ஜன. –
மத்திய ஜவுளி துறையின் கீழ் இயங்கும் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி கழகம்(HEPC) ஜெர்மனியில் பிராங்க்ப்ர்ட் நகரில் நடைபெறவுள்ள Heimtextil ஜவுளி கண்காட்சியில் மத்திய அரசு மானியத்துடன் (Market Access Support under Export Promotion Mission), 80 வீட்டு உபயோக ஜவுளி பொருள் (Home Textiles Exporters) ஏற்றுமதியாளர்களுடன் கலந்து கொள்கிறது. இந்த Heimtextil ஜவுளி வர்த்தகக் கண்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கு மேற்பட்ட ஏற்றுமதியாளர்களை கலந்துகொள்ள வைத்துள்ளோம்.
இதன் நிர்வாக இயக்குனர் என்.ஸ்ரீதர் கூறுகையில், ‘இந்தியா கைத்தறி ஏற்றுமதியில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆண்டுதோறும் சுமார் 450 கோடி மதிப்பில் கைத்தறி பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. நமது இந்திய அரசாங்கம், ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இந்த கண்காட்சி வழிவகை செய்யும்.
ஐரோப்பாவில் நெதர்லாந்து, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவை முக்கிய கைத்தறி ஏற்றுமதி சந்தையாக உள்ளது.
மேலும், கைத்தறி பொருட்களை ஏற்றுமதி சந்தை நோக்கில், உற்பத்தியை செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
Heimtextil 2026 என்பது உலகின் முன்னணி சர்வதேச வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான துணிகள் தொடர்பான வர்த்தக கண்காட்சியாகும். இது ஜெர்மனியில் ப்ராங்ப்ர்ட் நகரில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இம்முறை சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஐரோப்பா மற்றும் சீனா, ஜப்பான், தென்அமெரிக்கா, ஆசிய நாட்டு பிரதிநிதிகளும் அடங்கும்.
HEPCன் கீழ் அரியானா, தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இக்கண்காட்சியின் மூலம் ரூ.200 கோடி மதிப்பில் கைத்தறி ஏற்றுமதி ஆர்டர்களை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?