பொங்கல் விடுமுறை நாள்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"பொங்கல் விடுமுறை நாள்களையொட்டி ஜன. 15, 16, 17 தேதிகளில் மெட்ரோ ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
அதன்படி மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து இயங்கும்.
அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நண்பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?