
" கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே தமிழகத்தில் இடமில்லை " என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை பார்த்து பேசி விட்டு வந்தவுடன் வைகோ கூறியிருக்கிறார்.
திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள் துணை முதல்வர் கனவில் மிதக்கின்றன. அந்த கட்சிகள் தங்களுடைய உண்மையான பலம் என்ன என்று அறியாமல் இருக்கின்றன.
திமுகவுடனான கூட்டணி மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு டிபாசிட் கிடைப்பதே அரிது என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இப்படி ஆட்சியில் பங்கை தேர்தல் நேரத்தில் அடித்து பிடித்து வாங்கிவிடலாம் என்ற கனவுகளோடு காத்திருப்பவர்களின் கனவுகளை கலைப்பதற்கு ஸ்டாலின் வைகோவை பயன்படுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது.
" ஆசை வெட்கம் அறியாது " என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப திமுகவின் கூட்டணி கட்சிகள் சில கூட்டணி ஆட்சி வேண்டும் என்ற தங்களது உள்ளக் கிடக்கையை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றன.
இந்தியா மீதான புதிய வரி விதிப்பை அமல் படுத்துவதை ட்ரம்ப் ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கிறார்.
ட்ரம்ப் அதிபர் ஆனதிலிருந்து உருப்படியான காரியங்கள் எதையும் செய்யவில்லை.
உலக நாடுகளின் மீது வரி விதிக்கும் ஒரே காரியத்தை ஒரு நிதியமைச்சர் போல தீவிரமாக செய்து வருகிறார்.
இவரது வரிவிதிப்பு கேலிக்கூத்தாக இருக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்தியாவுக்கு 25 சதவீத வரியையும் அத்துடன் அபராத வரியையும் விழித்திருந்தார் ட்ரம்ப்.
ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு
இந்தியா பணிந்து விட்டது போல தோன்றுகிறது. இந்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்கள் நேற்றிலிருந்து ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன என்று ஊடகங்கள் கூறுகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
வழங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தி
தொடர்பாளர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உலகின் உயரிய விருதை
ஒருவர் தனக்கு வழங்க வேண்டும் என்று கேட்பது
கேலிக்கூத்தாகும். ஒருவரது
பெயரை அடுத்தவர் பரிந்துரை செய்தால்தான்
மரியாதை.
********
வெ.ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?