வாசகர் கடிதம் (முத்து ஆனந்த்) 28.07.25

வாசகர் கடிதம் (முத்து ஆனந்த்) 28.07.25


     *ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தைப் பார்த்ததைப் போல் தனியோர் அலாதியான மகிழ்ச்சி ஏற்பட்டது கவி வெண்ணிலவன் ஐயா அவர்களின் 'காதலின் பொன் வீதியில்' தொடர் கதையைப் படித்த போது -*

     *இத்தனை வாரங்கள் போனதே தெரியவில்லை அத்தனை வேகம் அத்தனை விறுவிறுப்பு எம் ஜி ஆர் திரைப்படங்களில் வருவது போல் சூப்பர் ஆக் ஷன் காட்சிகள் சிவாஜி கணேசன் திரைப் படங்களில் வருவது போல் உணர்ச்சிகரமான வசனக் காட்சிகள் அதனாலோ என்னவோ அதற்குள் இந்தக் கதை முடிந்து விட்டதே என்று நினைக்க வைத்தது இந்தக் கதை!*

     *அட.... இத்தனை கலக்கலாக எழுதியிருக்கிறாரே.... அதற்குள் 'தொடரும்' என்று போட்டு விட்டாரே என்று ஒவ்வொரு வாரமும் நினைக்க வைத்து விட்டார் கவி வெண்ணிலவன் ஐயா அப்படி என்னதான் இருக்கும் அவர் எழுதுகோலில் என்று ஆச்சரியப்படும்படி எழுதியிருக்கும் அவர் தொடர் கதைக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மனம் குளிர மனம் மகிழ மனம் பூரிக்க மனம் பறக்கத் தெரிவிப்பதில் மிகப் பெரிதும் மகிழ்கிறேன் நான் அவர் கதைக்கு உயிரோட்டமான ஓவியங்களை வரைந்து வழங்கிய காணிக்கையார் அவர்களுக்கும் என் மகிழ்வான பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்*

     *கதையில் தொடக்கத்திலிருந்து முற்றும் வரை என்னுடைய 'கா த ல் க வி தை க ளை'க் கதைக்கு இடையிடையே மிக அழகாகவும் வெகு நேர்த்தியாகவும் பயன்படுத்தி எனக்கு வாய்ப்பளித்த தலைமையாசிரியர் எழுத்தாளர் புதுக்கோட்டை மணல்மேல்குடி கவி வெண்ணிலவன் ஐயா அவர்களுக்கு என்னுடைய மேன்மைமிகு சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!*

     *அடுத்ததாகத் தொடர்ந்து சிறப்பான படைப்பாளிகளை உற்சாகப் படுத்தி அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் தமிழ்நாடு இ செய்தித்தாள் ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் எனது வாழ்ந்துகளையும் பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதில் பெரிதும் பூரிக்கிறேன்!*

     *மேலும் என்னுடைய கவிதைகளையும் கட்டுரைகளையும் தொடர்ந்து படித்து விமர்சனம் செய்து என்னை வாழ்த்தும் ஒவ்வோர் அன்பு உள்ளத்திற்கும் படைப்பாளர்களுக்கும் என் இ த ய ம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!*



முத்து ஆனந்த்

வேலூர்*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%