
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் அலைபேசி மூலம் வந்து சேரும் தமிழ் நாடு இ பேப்பரின்
சுறுசுறுப்புக்கும்
செய்திகளோடு தகவல்களையும் இலக்கிய படைப்புகளையும்
குறைவில்லாமல் தினந்தோறும் திரட்டி
தருகின்ற செய் நேர்த்திக்கும் ஈடு இணை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
கட்டணம் எதுவும் வாங்கிக் கொள்ளாமல்
வாரி வழங்கும் வள்ளல் உள்ளத்தோடு
வாசகர்களுக்கு பரிசுகளையும் அளித்து உயிர்ப்போடும் உற்சாகத்தோடும் பத்திரிகையை வழி நடத்திச் செல்லும் ஆசிரியர் குழுமத்தின் --குடும்பத்தின் பண்பட்ட உன்னத மேன்மைக்கு ராயல் சல்யூட்!
உள்ளூர் செய்திகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து பேதமற்ற சமத்துவத்தை பேணி காக்கும் இ பேப்பருக்கு
என்றென்றும் நன்றி!
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இதுவரை நாங்கள் அறிந்திராத
மகத்துவ பெருமை கொண்ட வரலாற்று தலைவர்களைப் பற்றி
தெளிவாக அறிந்து
எங்களைத் திறன் மிக்கவர்களாக்கி வருவதற்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
தினசரி 20+ 4 பக்கங்களில் செறிவான மேட்டரை செதுக்கி வைத்தாற் போல் செம நேர்த்தியில் தொகுத்து வழங்கி வரும் தமிழ் நாடு இ பேப்பரின்
சேவை இணையதள உலகில் மாபெரும் புரட்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இத்தகைய மேன்மைமிக்க பெருமைகளைக் கொண்ட தமிழ்நாடு இ பேப்பரின் ஆன்மீக அச்சு வெளியீடான
தெய்வம் இதழுக்கு
வாசக பெருமக்கள் அனைவரும் உள்ளார்ந்த நேசத்துடன் ஆதரவு அளித்து சர்குலேஷன் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்து
அதிசயிக்க வைக்க வேண்டும் என்று இந்த தருணத்தில் அன்புடன் வேண்டி விடை பெறுகிறேன்.
பி.சிவசங்கர்
கோவை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?