ஆளும் வளரணும்..அறிவும் வளரணும்!

ஆளும் வளரணும்..அறிவும் வளரணும்!


இந்தா உனக்குப் பிடிச்ச லெமன் சாதமும், உருளைக் கிழங்கு வறுத்தும் வச்சு இருக்கேன். இன்னிக்கும் புராஜக்ட், அஸைன்மென்ட் னு லஞ்ச் நேரத்துலயும் எதையாவது வேலை செஞ்சிட்டு சாப்பிட நேரமில்லே ன்னு மிச்சம் கொண்டு வந்துடாதே" கண்டிப்பான குரல்ல கீதாவின் அம்மா.

சரிம்மா சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காதே.

 சேரி ! ஞாயித்துக் கிழமை வேற வேலை எதுவும் வச்சிக்காதே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றப் போறாங்க சாங்காலம். 

இப்ப எதும் வேண்டாம்மா. வழக்கம் போல அலுத்துக் கொண்டாள் கீதா. இப்படியே எத்தனை நாள் தள்ளிபோடப்போறே !

கீதா பதிலேதும் கெளம்ப இந்தா! குடையைக் கொண்டு வந்து கையில் கொடுத்தாள். எடுத்துக் கிட்டு போ!

இது வேற... பழைய பஞ்சாங்கம் மா நீ மைண்ட் வாய்சுனு அவ சொன்னது அம்மா காதிலயும் கேட்டது. 

சாயங்காலம் சீக்கிரம் வா பேசிக்கலாம் அம்மா உள்ளே போக கீதா வேலைக்குப் போக தெருவில் இறங்கி நடந்தாள்.

கல்யாணத்தை தள்ளிப் போட்டுகொண்டே போ றா. இவளை எப்படியும் பேசி வழிக்கொண்டு வந்துடணும் இன்னிக்கு என அம்மா தீர்மானம் செய்து கொண்டாள். இவளுக்கோ மேலே படிக்க வேண்டும் கேரியர் ல மேலே மேலே எதாவது செய்யவேண்டும் என்கிற வைராக்கியம். ஆனா அம்மாவின் ஆதங்கம் இவளுக்குப் புரியறது இல்ல. 


மாலை இல்லேல்லை முன்னிரவு 7.15ககு தான் வீட்டுக்குள் வந்தாள் பெண். வழக்கம் போல அம்மா "உனக்குப் பிடிக்கும்னு..". திங்கறதுக்கு கொண்டு வைத்தாள்.... பேச்சைத் துவங்குவதற்காக. 

அதை வாயில் போட்டு அனுபவித்து சாப்பிட.. 

கீதா... இந்த ஞாயித்துக்கிழமை அவங்க வர்றாங்க! இப்போ பேசலாமா?

ஓ! .. "வேண்டாம்மா" கராறும் கண்டிப்பும் குரலில்.

"என்னடி சொல்றே?!" இதுவும் போச்சா?! பதைப்போடு அம்மா.

கொஞ்சம் பொறுமையா கேக்றயா?! குரலில் தெளிவும் அழுத்தமும் ..

இன்னிக்கு கிஷோரைப் பார்த்தேன்.

அது யாரு கிஷோரு!? ஏதாவது காதல், கீதல் ஆ? அம்மாக்கு படபடத்தது மனசு! அதாம்மா போன மாசம் வந்து பாத்துட்டுப் போனாங்களே? அந்த பிள்ளை தான். நீ கூட வேண்டாம்னு ஒதுக்கினியே!

ஓ! அவனா! அப்பாடி! T.V ஐ ஆப் பண்ணிட்டு சேரை இழுத்துக் கிட்டப் போட்டுக்கிட்டு அம்மா ஒக்காந்தா.

"வீட்டுக்கு வர்றப்போ பஸ் வர லேட் டாச்சு நான் M.A.assignment ellam கொடுத்துட்டு அடுத்ததைப் பத்தி யோசிச்சிட்டே இருந்தேன். எதிரில அவன் வந்தான். பின் நடந்ததைச் சொன்னாள். 

என்னைப் பாத்து ஹலோ! ன்னு ஒரு ஸ்மைல்! ஸ்கூட்டர் ப்ரேக் டவுன் ஆனதால.. mechanic ஷாப்ல விட்டுட்டு நடந்து வந்தானாம்..

பக்கத்துல இருக்கும் பார்க்கில உக்காந்து பேசலாமா? கிஷோர் தான் வாயைத் திறந்தான் முதல்ல. எனக்கு ஓகே சொல்லிட்டேன். அப்போ உங்களுக்கு பிடிக்கலையா? அப்புறம் ஏன் proceed பண்ணவே இல்ல?! 

கீதா: இல்லை நான் மேலே படிக்கணும்னு அப்புறந்தான் கல்யணம். அதான்..

இப்போ M.A முடிக்கபோறீங்க . அப்புறம் என்ன?

எனக்கு Ph. D பண்ண ஆசை இருக்கு?

ஓ! குட்! ஐ அப்பிரிசியேட்! பண்ணுங்களேன்.

இருவரும் தொடர்ந்து நேரம் போவது தெரியாமல் மேற்படிப்பு சம்பந்தமாகப் பேசினார்கள். கிஷோர்அவள் படிப்பிற்கு எல்லா வகையிலும் துணையாகப் பொறுப்பேற்பேன் என்று உறுதி மொழி கொடுத்தான்.

வீட்டுக்கு லேட்டா வந்த காரணத்தை அம்மாகிட்டே எடுத்துச் சொல்லி அம்மா! ஏன் இந்த வரன் வேண்டாம்னு ஒதுக்கினே? கேட்டாள் 

ஆமாண்டி! அவனுக்கு இரண்டு தங்கை. படிச்சுண்டு இருக்கா. அவங்க படிப்பு, கல்யாணம் இன்னும் இன்னும் னு அவங்களைக் கரையேத்துற பொறுப்பு உனக்கு ஆகிடும்.

என்னம்மா! பழம் பஞ்சாங்கமா பேசிண்டு.என்னை மேல படிக்கிறதுக்கு அவர் துணையா இருக்கேன் என்கிறார். மத்த பிரச்சினை எல்லாம் சமாளிச் சுக்கலாம். ஓகே யா?!

படிப்பறிவு பல சிக்கல் களையும் அவிழ்த்து விடும் என்பதைப் புரிந்து கொண்டாள் அம்மா.


Dr . விஜயலக்ஷ்மி குமரகுரு

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%