மன்னிப்புடன் தான் இன்றைய வாசகர் கடிதத்தை எழுத வேண்டிய கட்டாயம் அடியேனுக்கு.
எப்போதுமே வாழ்க்கை நம் வசத்தில் இல்லை என்பதை தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருக்கும் மனிதனும் அறிந்து அடங்கித் தான் போக வேண்டும். வாழ்க்கை என் வசத்தில் தான் உள்ளது என்று ஓங்கிப் பேசுபவர்களும் இங்கே உண்டு தான்.
எல்லாம், எல்லாரும் கலந்தது தானே இந்த சமூகம் என்று விரி பார்வையில் உள்ளார்ந்து வாழப் பழகிக் கொண்டால்
எதையும் எளிதில் ஏற்றுக் கொள்ளும்,
உடன்படும் பக்குவம் தானாகவே சொந்தமாகி விடும்.
உடன் படுதலுக்கும்
( Agreement) ஏற்றுக் கொள்வதற்கும் ( Acceptance) சற்று வித்யாசம் உண்டென்பது நம்மில் பலரும் அறிந்தது தான், என்றாலும்
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு உதாரணம் மூலம்
சொல்லலாம் என்று தோன்றுகிறது. ( பண்டிதர்கள் பொறுத்தருள்க)
அவசர தேவைக்கு மனைவி என்னிடம் ஆட்டையப் போட்டு சேர்த்து வைத்ததைக் கொண்டு வந்து தந்ததை வாயெல்லாம் பல்லாக அதை வாங்கிக் கொண்டால்
அக்ரீமெண்ட்!
என்னிடம் கொடுத்த அடுத்த நொடியில்
' நான் கேட்கும் போது திருப்பித் தந்து விட வேண்டும் என்று கறார் கலந்து சொல்லும் போது அரை குறையாய் பல் காட்டி சிரித்தால், Acceptance...
இதைப் படித்து விட்டு நீங்கள் சிரித்தால்
உள்ளுக்குள் நான்
Agreement...சிரிக்காது சற்று எரிச்சல் காட்டினால் எனக்குள்
அது Acceptance... சரி
விஷயத்துக்கு வருவோம்...
'இன்று ஒரு நாள் வாசகர் கடிதத்துக்கு ஓய்வு கொடுத்தால் என்ன' என்று டபாய்க்கும் நிலைமை...
கோவையில் இருந்து
விருந்தினர் வருகை மட்டும் காரணம் இல்லை... குற்றால அருவியில் குளித்து சுகம் காண வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்தவர்களை எப்படி தட்டிக் கழிக்க முடியும்...
ஆனாலும் அடியேன் அந்த முயற்சியிலும்
பவ்யமாய்...பாதுகாப்பாய் இறங்கியும் பயனில்லாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.
இதனால் நேரப் பற்றாக்குறை பலமாக என்னை அழுத்திய காரணத்தால் தான்
நழுவ வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
எட்டிப் பார்த்தது.
ஆனாலும் உள் மனம் துடித்தது. ஒரு நாள் வாசகர் கடிதத்தை மிஸ் பண்ணாதே...
அப்படி எழுதாமல் விட்டால், அடிக்கடி வியாக்கியானம் பண்ணி உன்னை நல்லவனாகக் காட்டி
பில்ட் அப் பண்ணுகிற
பழிக்கு பாயிண்ட்ஸ் கூடி எகிறி விடும்...
உஷார்... ஜாக்கிரதை...
என்று எதை எதையோ சொல்லி உள்மனம் உந்துதல் பண்ணியதால், டேக்கா கொடுக்க வேண்டும் என்று எண்ணியதை சத்தம் இல்லாமல் வாபஸ் வாங்கிக் கொண்டு
அம்பேல் ஆனேன்.
கடிகாரம் பார்த்தேன். அடியேன்
பி.பி. ஆசாமி...
எதிர்பார்த்தது போல்
எகிறியது. இன்று நமது இ.பேப்பரைப்
பார்த்ததோடு சரி...
விருந்தினர் உபயத்தால் உள்ளே நுழைந்து படிக்க முடிய வில்லை... எப்படி எழுதுவது? முடியுமா?
எப்படியாவது எழுதித் தான் ஆக வேண்டும்...
உலகில் உள்ள மனிதர்களை ஒரு கோணத்தில் மூன்று வகையாக பிரித்தனர்.
1. எதையும் அசைப்பவர்கள்
2. . எதற்கும் அசையாதவர்கள்
3. எதற்கும் அசைபவர்கள்.
( இந்த தருணத்தில் அவரவர்கள் தாங்கள் இதில் எந்த வகை என்று சுய சோதனை பண்ணினால் பொழுது கொஞ்சம் போகும்...அவரவர் விருப்பம்.)
அடியேன் எந்த வகை என்பதை என் சகதர்மிணி (கூட இருக்கிறவள் ஆயிற்றே... இந்த நேரத்தில் பெஞ்சாதியை கூட
என்ற வார்த்தையை வைத்து ஜாலம் பண்ணிய வாரியார் சுவாமிகள் நினைவில் வந்து நிற்கிறார்...
இதை விளக்க நேரம் இதுவல்ல... இன்னொரு நாள் பார்ப்போம் பாஸ்)
எதற்கும் அசைபவர் லிஸ்டில் அடியேன் வருவதாக, இஷ்டப்பட்ட நேரமெல்லாம் இதைச் சொல்லி இன்சல்ட்டோடு இம்சை தருவார் என்பது வேறு விஷயம்....
உண்மையை ஒப்புக் கொண்டால் தான் உலகளவும் இல்லை உயிரளவும் நிம்மதி கிடைக்கும்.
எதற்கும் அசைபவனாக இருக்கப் போயித் தானே, இக்கட்டான நேரத்திலும் உள் மனம்
சொன்னதற்குக் கட்டுப்பட்டு வாசகர் கடிதம் எழுதத் துணிந்தேன்.
மீண்டும் பொறுத்தருள வாசக சொந்தங்களை வேண்டிக் கொள்கிறேன்...
தமிழ் நாடு இ பேப்பரை இன்று
பார்த்ததில் உணர்ந்தது...
சொதப்பல் இல்லாத சுவையும் சுவாரஸ்யமும் அள்ளும் 20 பிளஸ் 4
பக்கங்கள்...
பசுமையும் பழமையும்
பண்போட்டமும் நிறைந்த கவிதைச் சுரங்கம்... படிக்கத் தூண்டும் படங்கள்...
இனிமை நிறைந்த படைப்புகள்...
அணிவகுத்து அழகூட்டம் வாசகர் கடிதங்கள்...
சத்தான கட்டமைப்பில் செய்திகளின் அரங்கேற்றம்...
அப்பப்பா...
தமிழ் நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்தின்
அற்புதமான விருந்துக்கு மீண்டும் மீண்டும் நன்றியுடன்
வாழ்த்தும் பாராட்டும்...
வாழ்க வையகம்
நெல்லை குரலோன்
பொட்டல் புதூர்