news Breaking News
clock

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 28.11.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 28.11.25



டித்துவா புயல் வருகை. புயலுக்கு புது புது பெயர்களை வைத்து ரொம்ப பயமுறுத்துகிறார்கள். செங்கோட்டையன் விஜய் கட்சியில் ஐக்கியமானார். உள்ளூர் செய்திகள் அனைத்தும் தரமாக உள்ளது. 

கிராம்பின் மருத்துவ பயன்கள் பற்றிய கட்டுரை மிக்க பயனுள்ளதாக அமைந்தது. தமிழ்நாடு முழுவதும் 702 ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை. 

பழமை கால கல்யாணம் பற்றிய கட்டுரை சிறப்பாக இருந்தது. 

பைரவருக்கு ஏன் மிளகாய் பொடி அபிஷேகம் செய்யப்படுகிறது என்ற கட்டுரை பல உண்மைகளை அறிய முடிந்தது. டியூட் படத்தில் இளையராஜா பாடல்களை நீக்க கோரி மனு. 

ஊட்டி தாவரவியல் பூங்கா சீரமைக்கப்பட்டது. பெண்களுக்கு பத்து லட்சம் வரை கடன் வழங்கப்படும் 

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. 

டிசம்பர் முதல் செம்மொழி பூங்காவிற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அசாமில் இரண்டாம் திருமணம் செய்தால் சிறை தண்டனை வழங்கப்படும். தரமான செய்தி. 

இலங்கை கனமழையில் 4000 பேர் பாதிப்பு. இந்தோனேசியாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது 

இதுவரை 49 பேர் பலியானார்கள் 

இன்றைய தினம் உள்ள அனைத்து செய்திகளும் கவிதைகளும் கட்டுரைகளும் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.


காதல் சாம்ராஜ்யத்தின் தலைவர் முத்து ஆனந்த் அவர்கள் கவிதை போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. கவிதைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமாகும் வாழ்த்துக்கள் சார் 


தமிழ்நாடு இ பேப்பர் வழங்கும் 

தெய்வம் இதழுக்கு நாம் அனைவரும் சந்தா கட்டி ஆதரவு அளிக்க வேண்டும் 

ஆன்மீகத்தை சிறப்பாக வெளிக்கொண்டுவரும் தெய்வம் 

இதழுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் மீண்டும் நாளை சந்திப்போம் 



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News