பிபிசி நிறுவனத்திற்கு எதிராக 80 ஆயிரம் கோடி இழப்பீடு வழக்கு
நடைபெறுகிறது. மோடிக்கு
எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. பார்லிமென்டில் காலாவதியான 71
சட்டங்கள் நீக்கப்பட்டது. திருப்பதியில் டோக்கன் இல்லாவிட்டாலும் சொர்க்கவாசல் தரிசனம் செய்யலாம்
பயனுள்ள மருத்துவ குறிப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது.
சபரிமலையில் உணவு பாதுகாப்பு ஆய்வு செய்யப்பட்டது.
மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு. தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை. ஸ்மார்ட் போன் குப்பைகளை வெளியேற்ற டிப்ஸ் பற்றிய கட்டுரை மிகச் சிறப்பானது.
பஞ்சபாண்டவர்கள் பற்றிய கட்டுரை தெரியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. சென்னை சுற்றுலா பற்றிய கட்டுரை புதுமையாக இருந்தது . ரயிலில் ஏழு லட்சம் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் பிடிபட்டது. மும்பையில் 14 கோடி செலவில் புதியதாக ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. நேரு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. மூன்று ஆண்டுகளில் 428 மத்திய காவல் படையினர் தற்கொலை செய்து கொண்டனர். வாரணாசியில் உள்ள
மடம் கோவில்களுக்கு வரி விதிப்பதற்கு கோவில் சார்பாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது
வாக்காளர் பட்டியல் உள்ள குறைகளை நீக்கவே எஸ் ஐ ஆர் கொண்டுவரப்பட்டது. பிரேசில் நாட்டில் வீசிய சூறைக்காற்றால் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்தது
இன்றைய செய்திகள் அனைத்தும் அருமையாக தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?