
சென்னை, ஜூலை 13 -
கேரளாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள் அமைக்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை முன்மொழிந்தது. ஆனால் பல்வேறு விமர்ச னங்களுக்கு பிறகு, உத்தரவு பிறப்பித்த அதே நாளில் இத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. கேரளாவில் பள்ளி வகுப்ப றைகளில் ‘கடைசி இருக்கை மாணவர்’ என்ற வார்த்தை இருக்கக் கூடாது என்ற நோக்கில் ‘ப’ வடிவில் வகுப் பறைகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வரு கின்றன. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதை அமல் படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. இவ்வாறு இருக்கைகள் அமைக்கப்பட்டால் ஒவ் வொரு மாணவரும் கரும்பல கையையும் ஆசிரியரையும் தெளிவாகப் பார்க்க முடி யும். மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எளி தான அணுகுமுறை உருவா கும். ஆசிரியர்கள் மாண வர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும். ஆசி ரியர்கள் கூறுவதை மாண வர்கள் கேட்பதில் இருக்கும் சிரமம் குறையும் என கல்வித்துறை தெரிவித்திருந் தது. மேலும் இருக்கைகள் அமைக்கப்படுவது போல அதற்கேற்ற காற்றோட்ட வசதி, ஒளி வசதி ஆகிய வற்றையும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. ஆனால் பள்ளிக் கல்வித்துறையின் இந்த உத்தரவு சமூக வலை தளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு தரப்பினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், இன்னொரு தரப்பினர் இந்த அறிவிப்பை விமர்சித்தனர். மாணவர்கள் நீண்ட நேரம் பக்கவாட்டில் பார்வை யைச் செலுத்த வேண்டியி ருக்கும். இதனால் மாண வர்களுக்கு கழுத்து வலி, பெண் குழந்தைகளுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூக வலை தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து உத்தரவு பிறப்பித்த அதே நாளில் ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வல்லு நர்களிடம் உரிய ஆலோ சனை பெறும் வரை இத்திட் டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இது தொடர் பான முடிவு அறிவிக்கப் படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?