
பி.பழனியின் 'தசாவதாரம்' சிறுகதை இந்த காலத்தில் பல் வைத்தியம் எந்த அளவுக்கு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது. ஆனாலும் பல் வைத்தியம் மிக செலவு அதிகமான வைத்தியமாக மாறிவிட்டது என்பதும் உண்மைதான்.
அரசு அலுவலகங்களில் நடக்கும் தாமதங்கள், எதையும் லஞ்சம் கொடுத்தால்தான் பெற முடியும் என்ற நிலையை நயமாக சொல்லியிருக்கிறார் கயப்பாக்கம் இரா.இரமேஷ். பாவமும் சாபமும் சிறுகதை மனதில் நிற்கிறது.
நிரஞ்சனாவின் தொடர் மனதைக் கவர்கிறது. அபி யாழினி மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பு, ஏதாவது பிரச்சனைக்கு வழி வகுக்குமோயென்று தோன்றுகிறது.
எம்.அசோக்ராஜாவின் தெய்வீக இரகசியங்கள் உண்மையோ பொய்யோ, ஆனால் இதெல்லாம் ஆன்மிக நம்பிக்கைகள் என்பது மட்டும் உண்மை.
'புலித்தோல்... யானைத்தந்தம்... மான்கறி... ருசிபார்த்த மனுஷனுக்கு காடோ நாடோ எல்லாம் எனதே என்று வனம் ஆள புறப்பட... இதோ வனம் ஒன்று அழும் குரல் வனந்தரத்தில் கேட்கிறது' என்ற வே.கல்யாண்குமாரின் வனத்தின் குரல்... என்ற கவிதை மனதை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு மனிதனும் படித்து சிந்தித்து திருந்தவேண்டிய பாடம் இந்த கவிதை.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் 'பழமொழிகளும் அதன் உண்மை விளக்கமும் படித்தபோது, ஆச்சரியமாக இருந்தது. வியப்பான சிறப்பான தகவல்களை அவ்வப்போது தரும் தமிழ்நாடு இ.பேப்பர் ஆசிரியர் குழுவை பாராட்டுகிறேன்.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?