அன்புடையீர்
வணக்கம் .தமிழ்நாடு இ பேப்பர். காம் 15 .7. 25 அன்றைய நாளிதழின் முதல் பக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்த செய்தி நல்ல செய்தியாக எண்ணி படிக்க வைத்தது. இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக எனக்கு அமைய உதவியது.
அற்புதமான பழம்பெரும் நடிகை சரோஜாதேவி அவர்கள் காலமான செய்தி மனதை வேதனையில் ஆழ்த்தியது. திருக்குறள் மிகவும் அருமை பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். ஆண்டாள் பிரதிஷ்டை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கல்யாணம் மிக அருமையான செய்தியாக மன மகிழ்ச்சியுடன் பார்க்க வைத்தது.
நலம் தரும் மருத்துவம் பகுதி மிகவும் அருமையான தகவல்களை தினமும் கொடுப்பது மன மகிழ்ச்சியாக உள்ளது. பசலைக்கீரையின் மருத்துவ குணங்களை படித்ததும் அது எளிதில் கிடைக்கும் ஒரு கீரை அதை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எண்ண வைத்தது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற செய்தியும் படமும் மிகவும் அருமை நேரில் செல்ல முடியாவிட்டாலும் நேரில் பார்த்த ஒரு உணர்வைத் தந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள் .
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் கமலா நேரு வரலாறு மிகவும் அருமை நேரு குடும்பத்தை பற்றியும் அவர்கள் எப்படி அரசியலில் பங்கேற்றார்கள் என்ற செய்தியும் மிக அருமையான தகவலாக வேண்டி ஆர்வமுடன் படிக்க வைத்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பல்சுவைக் களஞ்சியம் பகுதி அற்புதம் அதில் புதிய தகவல்களை கொடுப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான். சமையலறை ஸ்பெஷல் மிகவும் அருமை சமையல் டிப்ஸ்கள் தெரியாத பல டிப்ஸ்களாக இருந்ததால் ஆறுமுகம் படிக்க வைத்தது பாராட்டுக்கள் .
பெருமாள் கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் என்ற செய்தி படமும் பூரிப்புடன் பார்க்க வைத்தது பாராட்டுக்கள்.
சுற்றுலா பக்கத்தில் வந்த தேவதை நீர்வீழ்ச்சி புதிய தகவல் நிச்சயம் இதை ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவல் வந்தது திருவண்ணாமலை ஆறு புதிய புறநகர் பஸ் களை கொடியசைத்து துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த செய்தி ஆர்வமுடன் பார்க்க வைத்தது.
ஒவ்வொரு நாளும் க்ரைம் கார்னர் பக்கத்தில் வரும் செய்திகளை திகிலுடன் படித்தாலும் ஒரு விழிப்புணர்வு வருகிறது.
2030க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் திட்டம் பற்றி படித்ததும் இதனால் மிகவும் பலன் பெறும் இளைஞர்களை நினைத்து பெருமையாக உணர்ந்தேன்.
இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட எட்டு காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி என்ற செய்தி மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. அயல்நாட்டு செய்திகளையும் அழகாக தொகுத்து கொடுத்து அந்த நாடுகளுக்கே எங்களை அழைத்துப் போகும் தங்களின் பணிக்கு ஒரு ராயல் சல்யூட்
நன்றி
உஷா முத்துராமன்