news Breaking News
clock

வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன்! எப்ஸ்டீன் குறித்து பில்கேட்ஸ் விளக்கம்!

வருந்துகிறேன், மன்னிப்பு கோருகிறேன்! எப்ஸ்டீன் குறித்து பில்கேட்ஸ் விளக்கம்!


 

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துவதாகவும், மன்னிப்புக் கோருவதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான தகவல்கள் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஆங்கில ஊடகத்துக்கு புதன்கிழமை பேட்டியளித்த பில்கேட்ஸ் தெரிவித்ததாவது:


“எப்ஸ்டீன் குறிப்பிட்டது போன்ற மின்னஞ்சலை நான் ஒருபோதும் அனுப்பவில்லை. அந்த மின்னஞ்சல் போலியானது. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் என் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார்.


2011 ஆம் ஆண்டு முதல்முறையாக எப்ஸ்டீனைச் சந்தித்தேன். அதன்பிறகு மூன்று ஆண்டுகளில் பலமுறை அவருடன் இரவு விருந்தில் கலந்துகொண்டேன். ஆனால், அவருடைய கரீபியன் தீவுக்கு ஒருபோது சென்றதில்லை, பெண்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News