வருக புத்தாண்டு..

வருக புத்தாண்டு..



வருக வருக புத்தாண்டே! 

புவி மகிழ வந்திடு.. 


புது நம்பிக்கை விதைத்து.. 

மகிழ்ச்சி ஊற்றை பெருக்கிடு.. 


இருந்த சங்கடம் யாவுமே.. 

காற்றில் கரைய வேண்டுமே.. 


நல்லது மட்டுமே நடந்தே.. 

சிந்தை மகிழ செய்திடு.. 


வேலையற்றோர் வாழ்விலே.. 

மகிழ்ச்சி விளக்கு ஏற்றிடு.. 


காத்திருக்கும் கன்னியருக்கு..

உரிய காளையை சேர்த்திடு..


வீட்டில் மங்களங்கள்

பொங்கவே..

தொடக்க புள்ளி வைத்திடு..


நெஞ்சில் உறைந்த சோகத்துக்கு..

முற்றுப்புள்ளியும் வைத்திடு..


மழலைகள் மகிழ்ந்திட..

சிறுவர்களும் சிறகடிக்க..


கன்னிப்பெண்கள் கவனத்துடன்..

இளைஞர்களும் இறுமாப்புடனே..


இப்புத்தாண்டில்

சிறப்புறவே..

நீயும் வலதுகால் வைத்து பிறந்திடு..


நடுவயது மக்களும்..

நம்பிக்கை தொணிக்க வாழ்ந்திடவே..


முதியோரும் நோய் நொடியகன்று..

ஆரோக்கியம் பேணி வாழ்ந்திடவே..


இயற்கை இடர்களை நிறுத்திடு..

வசந்தம் பூக்க செய்திடு..


பிறக்கும் இந்த புத்தாண்டே..

இனிமை வாழ்வில் சேர்த்திடு..


வருக..வருக..2026


🙏🙏

தஞ்சை பியூட்டிஷியன்

உமாதேவி சேகர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%