வங்கிகளில் உரிமை கோராத வைப்பு தொகை ரூ.9.45 லட்சம் திரும்ப வழங்கப்பட்டது

வங்கிகளில் உரிமை கோராத வைப்பு தொகை ரூ.9.45 லட்சம் திரும்ப வழங்கப்பட்டது



தேனி, டிச.- வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீர்வு முகாமில் 8 பேருக்கு ரூ.9.45 லட்சத்தை உரியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் வழங்கி னார். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில், வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை தீர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரி வித்ததாவது: வங்கிகள் / நிதி சார் நிறுவனங்களிலி ருந்து சம்பந்தப்பட்ட வைப்புத் தொகையா ளர்கள் (அல்லது) இறந்த வைப்புத் தொகை யாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் (அல் லது) இறந்த வைப்புத் தொகையாளர்களின் பரிந்துரைக்கப்பட்டவர்கள் சரியான ஆதா ரங்களை சமர்ப்பித்து உரிமைக் கோரப் படாத தொகையினை வட்டியுடன் திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதனடிப்படையில், 1.10.2025 முதல் தற்பொழுது வரை மொத்தம் ரூ.1.23 கோடி வைப்புத்தொகை உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பித்த 266 நபர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகையினை பெறுவ தற்கான விண்ணப்ப காலம் 2026 செப்டம் பர் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள் ளது என்றார். முகாமில் வங்கிகளில் உரிமைக் கோரப்படாத ரூ.9,45,611 வைப்புத்தொகை சம்பந்தப்பட்ட 8 நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இம்முகாமில் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்தி கேயன், மண்டல மேலாளர் சந்திரகுமார் மற்றும் அனைத்து வங்கி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%