பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா விடுவிப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா விடுவிப்பு


 

பெங்களூரு: முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் மூத்த மகன் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் விடு​தலை செய்​யப்​பட்டு உள்​ளார்.


முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33), 10-க்​கும் மேற்​பட்ட பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு வெளி​யாகின. அவர் மீது வீட்டு பணிப் பெண் தொடர்ந்த பாலியல் வன்​கொடுமை வழக்​கில் பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது.


முன்​ன​தாக, அதே வீட்டு பணிப் பெண், பிரஜ்வலின் தந்​தை​யும் முன்​னாள் அமைச்​சரு​மான ரேவண்ணா கடந்த 2020-ம் ஆண்டு தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக வழக்கு தொடந்​தார்.


இந்த வழக்கு மக்​கள் பிர​தி​நி​தி​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. அதில் கடந்த ஆண்டு ஜாமீன் பெற்ற ரேவண்​ணா, நீதி​மன்ற கண்​காணிப்​பில் இருந்​தார். இவ்​வழக்​கின் விசா​ரணை முழு​வதும் நிறைவடைந்த நிலை​யில் நீதிபதி கே.என்​.சிவகு​மார் நேற்று தீர்ப்பை வெளி​யிட்​டார். அதில் கூறி​யிருப்​ப​தாவது:


ரேவண்ணா தன்னை 2020-ம் ஆண்டு பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக மனு​தா​ரர் குறிப்​பிடு​கிறார். ஆனால் அவர் 4 ஆண்​டு​கள் கழித்து மிக​வும் தாமத​மாக புகார் அளித்​தது ஏன்? அவரது தாமதத்​திற்​கான காரணம் குறித்து தெரிவிக்​கப்​பட​வில்​லை.


பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை செய்​ததற்​கான ஆதா​ரங்​களை அளித்த மனு​தா​ரர், ரேவண்ணா மீதான குற்​றச்​சாட்​டுக்கு ஆதா​ரங்​களை அளிக்​க​வில்​லை. எனவே ரேவண்​ணாவுக்கு பாலியல் வன்​கொடுமை வழக்​கில் தண்​டனை வி​திக்க முடி​யாது. அவரை விடு​தலை செய்​கிறோம். இவ்​வாறு தீர்ப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%