தேனி, - ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல் வர் கருணாநிதி சிலை நிறுவ வேண்டும் என திமுக கவுன் சிலர்கள் பேரூராட்சி செயலாளரிடம் மனு அளித்தனர். ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூ ராட்சி மன்ற தலைவர் பொன்.சந்திரகலா தலைமை தாங்கி னார். துணைத் தலைவர் ஜோதி, பேரூராட்சி செயல் அலு வலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடை பெற்ற மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்குவது குறித்தும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் திமுக கவுன்சிலர்கள் ஆண்டிபட்டி பேருந்து நிலை யத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி யின் சிலை வைக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலு வலர் மற்றும் தலைவரிடம் மனு அளித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?