வங்கதேச வான்வழியில் பறக்க ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்குத் தடை!
Feb 21 2026
29
வங்கதேச நாட்டின் வான்வழியைப் பயன்படுத்துவதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அரசுக்கு நிலுவைத் தொகையைச் செலுத்தாததால், அந்நாட்டின் வான்வழியைப் பயன்படுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச வான்வழிப் பாதை முடக்கப்பட்டதால், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் சில விமானங்கள் மிக நீண்ட மாற்றுப்பாதைகளில் பறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், கொல்கத்தாவில் இருந்து குவாஹட்டி போன்ற நகரங்களுக்கு மாற்றுப்பாதையில் செல்லும் விமானங்களின் பயணம் அதிக நேரம் எடுப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வழக்கமானது என்றும், இதுகுறித்து வங்கதேச அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த நடவடிக்கைகளுக்கான முழுமையான காரணம் குறித்து வங்கதேச அரசிடமிருந்து எந்தவொரு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால், மீதமுள்ள நிலுவைத் தொகையைச் செலுத்தாததே அதற்கான காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2025 டிசம்பர் வரையிலான வெறும் மூன்று மாதகாலத்தில் ரூ. 267.27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?