news Breaking News
clock

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

சென்னை, செப். 22–


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.


மத்திய கிழக்கு அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25ம் தேதி ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தமிழகத்தில் இன்று தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


26, 27ம் தேதிகளில் நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News