ரூ.2.23 கோடி லஞ்சம் வாங்கிய ராணுவ அமைச்சக அதிகாரி கைது

ரூ.2.23 கோடி லஞ்சம் வாங்கிய ராணுவ அமைச்சக அதிகாரி கைது


 

புதுடில்லி : வெளிநாட்டு நிறுவனத்திடம் 2.23 கோடி ரூபாயை லஞ் சமாக பெற்ற ராணுவ அமைச்சகத்தின் உற் பத்தித்துறை துணைத் திட்டமிடல் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் தீபக்குமார் சர்மா கைது செய்யப்பட்டார்.



ராணுவ அமைச் சகத்தின் சர்வதேச ஒத்துழைப்பு மற் றும் ஏற்றுமதி பிரிவில் துணை திட்டமிடல் அதிகாரியாகப் பணி யாற்றுபவர், லெப்டி னன்ட் கர்னல் தீபக்கு மார் சர்மா.இவரது மனைவி கர்னல் காஜல் பாலி, ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகரில் உள்ள காலாட் படைப்பிரிவு அதிகாரியாக உள்ளார்.



இந்நிலையில் ராணுவ அமைச்சகத்துக்கு தேவையான பொருட் கள் உற்பத்தி, ஏற்று மதி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள பல்வேறு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களின் பிரதி நிதிகளுடன் இணைந்து ஊழல் மற்றும் சட்டவி ரோத நடவடிக்கையில், தீபக்குமார் சர்மா ஈடுப டுவதாக மத்திய புல னாய்வு அமைப்பான சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது.



துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற் குச் சாதகமாகச் செயல் பட, பெங்களூரை சேர்ந்த ராஜிவ் யாதவ் மற்றும் ரவ்ஜித் சிங் ஆகியோர் சர்மாவுடன் தொடர்பில் இருந்துள்ளனர். துபாய் நிறுவ னத்தின் சார்பாக தரகர் வினோத் குமார் என்ப வர் மூலம் டில்லியில் சர்மாவுக்கு கொடுக்கப்பட்டது.



லஞ்சம்

தொடர்ந்து சர்மா வீட்டில் அதிகாரிகள் நடத் திய சோதனையில், 2.23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் அனைத்தும் லஞ்சமாக பெற்றதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.இதையடுத்து சர்மா மற்றும் வினோத் குமார் ஆகிய இருவரையும்சி.பி.ஐ., அதிகாரிகள் கைத் செய்தனர்.



இதேபோல் ராஜஸ் தானின் ஸ்ரீ கங்காந கரில் உள்ள, காஜல் பாலி வீட்டில் நடத்தப் பட்ட சோதனையில் 10 லட்சம் ரூபாய் பறிமு தல் செய்யப்பட்டதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து ஊழல் சதியில் ஈடுபட்டதாக சர்மா மற்றும் அவரது மனைவி கர்னல் காஜல் பாலி, துபாய் நிறுவ னத்தின் மீதும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. தொடர்ந்து டில்லி, பெங்களூரு, ஸ்ரீ கங்கா நகர், ஜம்மு போன்ற இடங்களில சி.பி.ஐ., அதிரடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



எச்சரிக்கை

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், முறைகேடுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்ற அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ம் மற்றும் அமைப்பு ரீதியில் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%