ராமநாதபுரத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு; நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் பங்கேற்பு
Dec 28 2025
14
ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் தஸ்தகீர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பாக உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து, எச்.ஐ.வி தடுப்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 15 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து, எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பின்னர், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த கலெக்டர், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பிரச்சார வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
மன்னார்குடியில் ரூ.3 கோடியில் விளையாட்டரங்கம் அமைக்க அடிக்கல்
திருவாரூர், டிச.26–
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், ரூ.3 கோடி மதிப்பில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட ஆர்.பி. சிவம் நகரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ரூ.3 கோடி திட்ட மதிப்பீட்டில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்டக் கலெக்டர் வ.மோகனச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?