தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு; தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Dec 28 2025
13
இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தமிழ்நாடு மாநில கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கிளை இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 2025 டிசம்பர் 23ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அரங்கத்தில் நடைபெற்றது.
கணிதத் துறை உதவி பேராசிரியரும் துறைத் தலைவருமான மாலதி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் இலங்குமாறன் தலைமையுரையாற்றினார். இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தூத்துக்குடி மாவட்ட கிளைத் தலைவர் டாக்டர் வசீகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் மற்றும் மனநலப் பாதுகாப்பின் அவசியம் குறித்து உரையாற்றினார். மாவட்ட கிளை மேலாண்மை குழு உறுப்பினர் முகவர் கருப்பசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
வளர்ச்சிப் பேச்சாளர்களாக அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநலத் துறையின் மூத்த உதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீராம், தற்கொலைத் தடுப்பு மற்றும் மனநல விழிப்புணர்வு குறித்து பேசினார். நார்கோட்டிக் இன்டலிஜென்ஸ் பியூரோ CID-யின் காவல் ஆய்வாளர் அனிதா வேணி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கினார். தமிழ்த் துறை உதவி பேராசிரியரும் துறைத் தலைவருமான ஜெயவசந்தி நன்றி கூறினார். ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் கிருஷ்ண பிரியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?