news Breaking News
clock

ரவுடி நாகேந்திரன் மகன் மீது ரியல் எஸ்டேட் அதிபர் போலீஸில் புகார்

ரவுடி நாகேந்திரன் மகன் மீது ரியல் எஸ்டேட் அதிபர் போலீஸில் புகார்


 

சென்னை: நிலப் பிரச்சினையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக ரவுடி நாகேந்திரனின் மகன் மீது ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ரவுடி நாகேந்திரன் முதல் குற்ற வாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டு சமீபத்தில் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.


இவரது 2-வது மகன் அஜித்ராஜ் வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் உள்ளார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிபரான அண்ணா நகரைச் சேர்ந்த லோகநாதன் (53) என்பவர் தனது ரூ.2 கோடி மதிப்புடைய நிலப் பிரச்சினையில் முன்பு அஜித்ராஜ் தலையிட்டு மிரட்டி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட


தாகவும், தன்னுடைய சொகுசு காரை பறித்துச் சென்றதாகவும் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News