news Breaking News
clock

ரயில் மீது ஏறி செல்பி மின்சாரம் பாய்ந்து மாணவர் படுகாயம்

ரயில் மீது ஏறி செல்பி மின்சாரம் பாய்ந்து மாணவர் படுகாயம்



கள்ளக்குறிச்சி,அக்.19 - கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அமைச்சர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (16) இவர் தனியார் பள்ளியில் ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் தீபாவளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்து ரீல்ஸ் போடுவதற்காக உளுந்தூர்பேட்டை ரயில் நிலை யத்திற்கு சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் டேங்கர் ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அந்த ரயில் மீது மாணவன் சதீஷ் குமார் எரி செல்போனில் தன்னை வீடியோ எடுத்துக் கொண்டி ருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற மின்சார கம்பி மீது அவனது கை பட்ட போது சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் படுகாயம் அடைந்த மாணவனை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விரு தாச்சலம் ரயில்வே உதவி ஆய்வாளர் சின்னப்பன் விசாரணை நடத்தி வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் 11ஆம் வகுப்பு மாணவன் ரயில் மீது ஏறி வீடியோ எடுத்த போது மின்சாரம் பாய்ந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News