மோர்க்குழம்பு

மோர்க்குழம்பு



புளிக்காத தயிர் 150கிராம் (கெட்டியாக கடைந்து வைத்துக் கொள்ளவும்)


ஊறவைத்த கடலைப்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் துருவல் அரை மூடி

பச்சைமிளகாய் 5

ஒரு துண்டு இஞ்சி

ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்

தேவையான கல்உப்பு 


பூசணிக்காய், சௌசௌ, சேம்பு, வாழைத்தண்டு, வெண்டைக்காய், மனத்தக்காளி, சுண்டைக்காய் வற்றல் எல்லாவற்றிலும் மோர்குழம்பு செய்யலாம்.


கொடுக்கப்பட்டுள்ள ஐட்டங்களை மிக்ஸியில் சிறிது நீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.


தேங்காய் எணணெயில் கடுகு, உளுந்து, அரைஸ்பூன் வெந்தயம், இரண்டு சிவப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து காய்கறிகளை போட்டு வதக்கி வெந்தவுடன் அரைத்த விழுதை தேவையான நீர் சேர்த்து கிளறவும். ஒரு முறை கிளறி அப்படியே விடுங்கள். இரண்டு மூன்று கொதி வந்ததும் நிதானமாக ஓரமாக கடைந்து வைத்துள்ள தயிரை சேர்த்து மெல்ல ஒரு கிளறு கிளறவும். பின்னர் ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும். 

கெட்டியாகவோ, நீர்க்கவோ உங்கள் விருப்பம் போல் செய்து கொள்ளவும். 


இந்த அளவு மூன்று, நான்கு பேருக்கு சரியாக இருக்கும்.


வற்றல் பயன் படுத்தினால் முதலில் வற்றலைத் தாளித்து ஒரு குட்டிக் கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். மோர்க்குழம்பு கொதி வரும்போது மேலே போட்டு விடவும். பரிமாறும் போது கிளறி பரிமாறலாம். நன்றி


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%