ராஜியும் மாயாவும் பள்ளித் தோழிகள்.ஆறாம் வகுப்புப் படிக்கிறார்கள்.
மாயா கொஞ்சம் வசதியான பெண். அவளின் தந்தை அவளை டாக்டர் ஆக்க போவதாக சொல்லிக் கொண்டு இருப்பார்.
ராஜி ஒரளவு சுமாரான வசதி உடைய வீட்டுப் பெண். அவள் டிகிரி முடித்து ஏதாவது ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி செய்ய முடிவு செய்திருந்தனர் அவளது பெற்றோர்.
இருவரும் நன்கு படிப்பவர்கள்.
படிப்பு மட்டுமல்லாமல் மற்ற விளையாட்டு ,பாட்டு,நடனம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கியவர்கள்.
நன்கு படித்து டாக்டராக வேண்டும் என்பது இருவருடைய ஆசை.
மாயாவின் குடும்பம் வேறு ஊருக்கு மாற்றலாகி சென்று
விட்டனர். இருவருக்கும் கடிதம் போக்குவரத்து இருந்தது.
காலம் ஓடியது. இருவரும் நன்கு படித்து ராஜி கல்லூரி விரிவுரையாளர் பதவியில் டாக்டர் பட்டம் பெற்றார்.
மாயா டாக்டர் ஆனார்.நடுவில் இடைப்பட்ட சில வருடங்கள் அவர்களால் சந்திக்க முடியவில்லை.கடிதப் போக்கு வரத்து இருந்தாலும் அந்தளவுக்கு அவர்களின் உணர்வுகளை பரிமாறும் சந்தர்ப்பம் அமையவில்லை.
ஒரு முறை அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களின் பள்ளியில் சந்திப்பது என முடிவு செய்தனர்.
அவர்களின் பணி காரணமாக குறைந்தது ஆறு மாதங்கள் கழித்துதான் இருவராலும் முடிந்தது.
அவர்களின் குடும்பச் சுமை, பணி சுமை என பல்வேறு பிரச்னைகள், எல்லாவற்றையும் ஒரளவு சரி பண்ணி ஒரு நாள் பள்ளிக் கூடத்தில் சந்தித்தனர்.
பல வருடங்களாக பார்க்காமல் இருந்ததால் கண்ணீருடன் ஒரு அன்புப் பரிமாற்றம் நடந்தது.
ஆனால் அவர்களின் பள்ளிக் கூடம் மிகவும் சிதிலமடைந்து இருந்ததால் இருவரும் பணம் செலவழித்து பள்ளியை அழகாக் கட்டி வருங்கால மாணவர்கள் நன்கு படிக்க எல்லா வசதிகளும் செய்து கொடுத்தனர்.
அதை ஒரு தங்களின் வாழ்க்கையில் செவ்வனே செய்ய வேண்டிய பணியாக எடுத்து செய்தனர்.
ஊர்மக்களும் மகிழ்ந்து பாராட்டி விழா எடுத்து கௌரவித்தனர்.

ஹேமா வாசுதேவன்
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?