மொக்க ஜோக்ஸ்

மொக்க ஜோக்ஸ்



ஒரு விருந்தில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டார்கள்.


நீங்க தப்பான விரல்ல கல்யாண மோதிரம் போட்டு இருக்கீங்கன்னு நெனைக்கிறேன். ..


ஆமா. .. ஏன்னா, நான் கல்யாணம் பண்ணிக்கிட்டதே தப்பான ஆளைத்தானே


😊 😄😊 😄😊


ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் பண்ணிக்கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒரு பெண்மணி தன்னையே கவனித்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது.  


ஷாப்பிங் முடிந்து பணம் கட்ட கேஷ் கௌண்ட்டர் பக்கமாக அவன் முன்னேறியபோது, அந்தப் பெண்மணி குறுக்கே வந்தாள்.


மன்னிக்கணும் நான் உன்னையே பார்த்துக்கிட்டிருந்தது உனக்குத் தர்மசங்கடமா இருந்திருக்கலாம்.  


வேற ஒண்ணும் இல்லை. .. சமீபத்துல செத்துப் போன என் பையன் மாதிரியே நீ இருக்கே என்றாள் அந்தப் பெண்மணி உடைந்துபோன குரலில்.


ஓ.. . ஸாரி, என்ற அந்த இளைஞன், உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா. . ? என்று கேட்டான்.


ஒண்ணும் வேணாம். . நான் இப்போ கிளம்பறேன்.  ஓரே ஒரு வார்த்தை..  போய்ட்டு வாங்க அம்மா-னு சொன்னேன்னா போதும்.  என் மனசு குளிர்ந்துடும். . என்றாள்.  


அதன்படியே அவள் கிளம்பும்போது போய்ட்டு வாங்க அம்மா என்று உருகினான் அவன்.


வரிசை மெதுவாக நகர்ந்து, கேஷ் கௌண்ட்டருக்கு அவன் போனபோது ஏகப்பட்ட தொகைக்கு ஒரு பில் நீட்டப்பட்டது.


நான் வாங்கியது கொஞ்சம் பொருட்கள்தானே.. . எப்படி இவ்வளவு பில் ? என்று கேட்டவனுக்குக் கிடைத்த பதில் -   


நீங்க வாங்கினது கொஞ்சம்தான்.  


இப்ப புறப்பட்டுப் போன உங்க அம்மா வாங்கினது எக்கச்சக்கமாச்சே


😊 😄😊 😄😊


*கடி டைம்*


''மை  லார்ட் !


என் கட்சிக்காரர்  பெண்மணி என்பதால் 


குண்டர் தடை சட்டத்தின்  கீழ் 


அவரை கைது செய்தது செல்லாது என அறிவிக்க கோருகிறேன் ''


🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%