மேட்டுப்பாளையத்தில் தனியார் பள்ளி பேருந்துகளில் வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். - அரையாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சோதனை நடத்தப்பட்டது.
தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டு அவற்றை மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலர் சத்தியகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், மண்டல துணை வட்டாட்சியர் ரேவதி, தீயணைப்பு நிலைய அலுவலர் அணில்குமார் மற்றும் பள்ளிக்கல்வி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வாகனங்களை முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு விதிமுறைகளின் படி பள்ளி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறதா? பேருந்தில் உள்ள அவசரக்கால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள்,தீயணைப்பு கருவிகள் போன்றவை சரியாக உள்ளனவா? வாகனங்களின் பிரேக், கியர் மற்றும் டயர்கள் நல்ல நிலையில் உள்ளதா? போன்ற சோதனைகள் நடத்தப்பட்டன. இதேபோல் பள்ளி வாகனங்களின் முன்புற பின்புற உட்புற சிசிடிவி கேமராக்கள் வருத்தப்பட்டுள்ளதா? அவை முறையாக ஜிபிஆர்எஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், செல்போன் பேசியபடி பள்ளி வாகனங்களை இயக்குவது, பள்ளி குழந்தைகள் வாகனங்களை விட்டு இறங்கும் முன்பாக வண்டியைநகர்த்துவது போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள், விதிமுறை மீறுவோரின் வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், 40 வயதை கடந்த ஓட்டுனர்கள் உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?