மெல்லிய இழைகள்

மெல்லிய இழைகள்



அந்த மெல்லிய இழையின் இரு பக்கங்களையும் பிடித்திருக்கும் கரங்களின் விரல்களில் எப்போதும் அன்பு நிரம்பியிருக்கும்.


இழையின் அதிர்வுகள் இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி தந்து சுமுகமான இருப்பை உணர்த்தும் அதிர்வில் அழுத்தம் அதிகமானால் சொற்கள் வெடித்து இழை அறுந்து போவதும் மீண்டும் இணைக்கப்பட்டால் பறவை அலகு சிறகு கோதும் யதார்த்தமாய் இடை முடிச்சு மறைந்து போகும்!


கண்ணாடித்தூள் பூசப்பட்ட பட்டம் விடும் மாஞ்சாக் கயிறு உரசியது போல் இழை துண்டிக்கப்பட்டு இருபுறமும் மனிதர்கள் சாய்வர்!


பல்வேறு இழைகளின் தொகுப்பால் உறவுகள் வாழ்க்கையாகி பல வண்ணங்கள் காட்டி எல்லோரையும் முன்னெடுத்துச் செல்லும்!


மீனாட்சி பாண்டியன் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%