news Breaking News
clock

முதல்தர கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை

முதல்தர கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை


 

மும்பை,


33-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (புதன்கிழமை) முதல் ஜனவரி 18-ந் தேதி வரை ஆமதாபாத், ராஜ்கோட், ஜெய்ப்பூர், பெங்களூரு ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் டெல்லி - ஆந்திரா அணிகள் மோதின. இதில் டெல்லி அணிக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, பண்ட் விளையாடினர்.


முதலில் களமிறங்கிய ஆந்திரா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணியில் விராட் கோலி, சதமடித்து அசத்தினார்.அவர் 131 ரன்கள் எடுத்தார்.37. 5 ஓவர்களில் டெல்லி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த நிலையில், இந்த போட்டியில் சதமடித்ததால் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அதன்படி முதல்தர கிரிக்கெட்டில் அதிவேகமாக 16 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.


மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் சச்சின் தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி உள்ளார். சச்சின் 538 போட்டிகள் விளையாடி 60 சதங்கள் விளாசியுள்ளார். விராட் கோலி 330 போட்டிகளில் 58 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News