news Breaking News
clock

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து, கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்தார்.


கன்னியாகுமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஆர்.அழகுமீனா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், -


கன்னியாகுமரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் 6 சட்டமன்ற தொகுதி களுக்கான 4694 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


நேரில் ஆய்வு:


கிட்டங்கியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் பெல் நிறுவனத்தை சார்ந்த 9 பொறியாளர்கள் கொண்ட குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கடந்த 11.12.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இப்பணியானது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் சென்னை தலைமைத்தேர்தல் அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.


மேலும் பணிகளில் முழு கவனத்துடன் ஈடுபட வேண்டும் என்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வில் உசூர் மேலாளர் சுப்பிரமணியம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இராமகிருஷ்ணன் (திமுக), விஜயகுமார் (பி.ஜே.பி), பன்னீர் செல்வம் (இ.தே.காங்), பாவலர் ரியாஸ் (வி.சி.க), சாலி (ஆம்ஆத்மி), அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News