news Breaking News
clock

மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் படி கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் படி கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்


 

சென்னை,


கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார்.


இந்த நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி உள்பட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.


இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-


2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? என மாவட்டச் செயலாளர்கள் தங்களின் கருத்துகளை எழுதி பெட்டியில் போட்டுள்ளனர். அவற்றை தனிப்பட்ட முறையில்நான் பிரித்து படிக்க இருக்கிறேன். அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணி குறித்து முடிவு செய்து வரும் 9 ஆம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. முழுக்க முழுக்க தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி இருக்கும்" என்று தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News