மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்வு

மாணவர், சுற்றுலாப் பயணிகளுக்கான அமெரிக்க விசா கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்வு

நியூயார்க்:

​மாணவர்​கள், சுற்​றுலா பயணி​கள் விசா, இந்​தி​யப் பணி​யாளர்​கள் அதி​கம் பயன்​படுத்​தும் எச்​-1பி விசா கட்​ட​ணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிர​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், இந்த கட்​ட​ணம் ஆண்​டு​தோறும் பணவீக்​கத்​துக்கு ஏற்ப உயர்த்​தப்​படும் என்​றும் 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.


கடந்த ஜனவரி​யில் அமெரிக்க அதிப​ராக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப் பல்​வேறு சீர்​திருத்​தங்​களை அமல்​படுத்தி வரு​கிறார். மேலும் பல்​வேறு நாடு​களுக்​கான இறக்​குமதி வரியை​யும் உயர்த்தி வரு​கிறார்.


இதனிடையே, கடந்த ஜூலை 4-ம் தேதி ‘ஒரு மிகப்​பெரிய அழகிய மசோ​தா' என்ற மசோ​தா​வில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்​திட்​டு, அதனை சட்​ட​மாக்கி உள்​ளார். அதன்​படி, தொழில்​முனை​வோர்​கள், மாணவர்​கள், சுற்​றுலாப் பயணி​களுக்​கான விசா பெறுவதற்கு, ஒரு குறிப்​பிட்ட தொகையை வைப்பு தொகை​யாக செலுத்த வேண்​டும். பணவீக்​கத்​தின் அடிப்​படை​யில் ஆண்​டு​தோறும் இந்​தக் கட்​ட​ணம் மாறு​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


பாது​காப்பு இருப்​புத் தொகை என்ற பெயரில் இந்​தத் தொகை வசூலிக்​கப்​படு​கிறது. சில குறிப்​பிட்ட நிபந்​தனை​களின் அடிப்​படையில் இந்த இருப்​புத் தொகை திரும்ப அளிக்​கப்​படும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. முக்​கிய​மாக விசா காலாவதியானவுடன் நீட்​டிப்பு கோராமல் உடனடி​யாக அமெரிக்​காவை விட்டு வெளி​யேறு​பவர்​களுக்கு இந்​தத் தொகை திரும்ப அளிக்​கப்​படும்.


மாணவர்​கள், சுற்​றுலாப் பயணி​கள், எச்​1பி விசா கட்​ட​ணத்தை அவர் கடுமை​யாக உயர்த்​தி​யுள்​ளார். தூதரக விசா பிரிவு​களுக்கு (ஏ மற்​றும் ஜி) மட்​டும் இதில் விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது ரூ.16 ஆயிர​மாக உள்ள இந்​தக் கட்​ட​ணம் இனி ரூ.40 ஆயிரமாக உயர்த்​தப்​படும்.


சுற்​றுலா / வணி​கம் (பி-1/பி-2), மாணவர் (எஃப்​/எம்), வேலை (எச்​-1பி) மற்​றும் பரி​மாற்ற (ஜே) விசாக்​கள் என எல்லா வகை​யான விசாக்​களுக்​கும் இது பொருந்​தும். ஏற்​க​னவே உள்ள விசா விண்​ணப்​பக் கட்​ட​ணங்​களு​டன் சேர்ந்​து, விசா வழங்​கப்​படும் நேரத்தில் இந்​தக் கூடு​தல் கட்​ட​ணத்​தை​யும் அமெரிக்க உள்​நாட்​டுப் பாது​காப்​புத் துறை வசூலிக்​கும்​ என்​று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%