சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்

வாஷிங்டன்;
அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1300 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் நாட்டை முன் எப்போதும் இல்லாத வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது நோக்கம் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார். அதனை செயல்படுத்தும் பொருட்டு, நிர்வாக சீர்திருத்தம், வரி விதிப்பு என ஒவ்வொரு கட்டங்களாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந் நிலையில் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு அங்கமாக, வெளியுறவுத்துறையில் உள்ள 1300 பணியாளர்களை முதல்கட்டமாக டிஸ்மிஸ் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவுப்படி, உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1107 பேரும், வெளிநாட்டு பணிகளில் 246 பேரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
நிர்வாக சீரமைப்பின் ஒரு பகுதியாக அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பணி நீக்கத்தை அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அலுவலகங்களின் வெளியே போராட்டத்தில் குதித்தனர்.
நாட்டுக்காக உழைத்த தங்களுக்கு சீர்திருத்தம் என்ற பெயரில் அநீதி இழைக்கக்கூடாது. எங்களை இதுபோன்று நடத்தக்கூடாது என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?