மலேசியாவில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய விழா கோலாகலமாக நடைபெற்றது..

மலேசியாவில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய விழா கோலாகலமாக நடைபெற்றது..


ஜூலை.10

மலேசியா:

கோலாலம்பூர் தலைநகர்

செந்தூலில் கவியரசு கண்ணதாசன் இலக்கிய விழா நடைபெற்றது.கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு ஆண்டு தோறும் மலேசிய கண்ணதாசன் அறவாரியம் விழா எடுத்து சிறப்பித்து வருகிறது.அவ்வகையில் இந்தாண்டும்  செந்தூல் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் இலக்கிய விழாவிற்கு ம.இ.கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் கண்ணதாசன் அறவாரியத் தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் தலைமை வகித்தார். கண்ணதாசன் அற வாரியச் செயலாளர் கரு.கார்த்திக் வரவேற்புரையாற்றினார். 

நாட்டின் காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய டத்தோ ஶ்ரீ தெய்வீகன் உட்பட கலைச்சேவையாற்றிய ஐவருக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன் கவிதைகள், பாடல்கள் குறித்து கம்பீரமான குரலில் டத்தோஶ்ரீ சரவணன் நகைச்சுவை ததும்ப 

உரையாற்றி வருகை தந்தவர்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்தினார்.மேலும் "திருவள்ளுவரும் கண்ணதாசனும்" என்ற தலைப்பில் ஜோதிடரும் கவிஞருமான கவிஞர் பெர்னாட்ஷா சிறப்புரையாற்றினார்.அதனை தொடர்ந்து தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழ்ச்சுடர் தாமல் சரவணன், இசைக்குயில் இந்திரா விஜயலட்சுமி ஆகியோர் இலக்கிய உரையாற்றினார்கள்.இவ்விழாவில் ஆயிரத்திற்கும் அதிகமான இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவியரசு கண்ணதாசனுக்கு பெருமை சேர்ந்தனர்.சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த இலக்கிய விழா கவியரசு கண்ணதாசனுக்கு ஒரு மணிமகுடமாக அமைந்தது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%