news Breaking News
clock

மரங்களும் பிள்ளைகளே

மரங்களும் பிள்ளைகளே



   " அழகிய பூக்களை செடிகளை கொடிகளை பசுமையான இயற்கையை ரசித்த வண்ணம் சிந்தனையை ஓடவிட்டாள் ஹோமியோபதி டாக்டர் தமிழ்த் தென்றல் .


       கும்பகோணத்தில் கிளினிக் வைத்து நடத்தி வரும் தமிழ்த் தென்றல் ஒரு இயற்கை ஆர்வலர் தமிழ் பற்று கொண்ட சிந்தனைவாதி .


       சிறு வயது முதல் மரங்கள் மீது கொண்ட பற்றால் சின்னதாக ஒரு நர்சரி ஆரம்பித்து அதன் வாயிலாக பல பள்ளிகள் கல்லூரிகள் அலுவலகங்கள் பொது இடங்கள் என்று பலருக்கும் மரக்கன்றுகளை இலவசமாக கொடுத்து அழகு பார்த்தவர் .


       தானே சென்று பல இடங்களில் மரக்கன்றுகளை நட்டவர் . அது வளரும் அழகை பல நாட்கள் சென்று பார்த்து ரசித்தவர் .


       குடும்பம் ஆன பிறகும் தன் சேவையை குறைக்காத நல்ல மனம் கொண்ட பெண்ணரசி பொன்னரசி .


      இன்று அந்த கல்லூரியில் சிறப்பு விருந்தினராக வந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினாள் தென்றல்.


      பொன்னாடை நினைவுப் பரிசு டீ ஸ்நாக்ஸ் நன்றி நவிலள் என்று முடிந்த பின்பு நிதானமாக நடை போட்டு வந்தாள் கல்லூரி முகப்பிற்கு தமிழ்.


       அந்த கல்லூரி வளாகத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவள் வைத்த மரக்கன்றுகள் அந்த கல்லூரி வளாகத்தில் வளர்ந்து தழைத்திருக்க கனிகள் கூட கண்ணில் பட்டு அவள் முகம் மலர்ந்தது ஜொலித்தது .


      அந்தந்த மரங்கள் அருகில் சென்று பேசி மகிழ்ந்து கட்டி அனைத்து புத்துணர்ச்சி பெற்று அந்த மரங்கள் இருந்த பகுதியில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு அந்த பசுமை நிழலின் கதகதப்பில் பெருமூச்சு விட்டு கண்களில் வழிந்த நீரை மெல்ல துடைத்துக் கொண்டாள் தென்றல் .


      வயதும் காலமும் இன்னும் உண்டு என்பதால் டாக்டர் தமிழ் தன் பசுமை ஈர்ப்பை நேசத்தை சுவாசத்தை இன்னும் பல இடங்களில் காண வேண்டும் என்ற நோக்கிலே தன் நர்சரியை விரிவு படுத்தினாள் தன் வருமானம் முழுதும் பசுமைக்கு தான் என்பது போல வாழத் தொடங்கினாள் ..."


       பெற்ற குழந்தைகளைப் போல இயற்கையை மரங்களை நேசிக்கும் இந்த வரம் இன்னும் பலருக்கும் இந்த தமிழ்நாட்டில் வந்து விட்டால் மழைக்கும் தூய்மையான சுவாசக் காற்றுக்கும் காலநிலை மாற்றம் இல்லா நிலையும் கிடைத்துவிடும் என்கிற சமூக சிந்தனை அக்கறை பொங்கி வழிந்தது டாக்டர் தமிழ்த்தென்றல் முகத்தில் ஆனந்த கண்ணீராக ..." 


சீர்காழி. ஆர். சீதாராமன்.

9842371679 .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News