சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பிசியோதெரபி 4ஆம் ஆண்டு மாணவி பெரம்பூர் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனை உரிமையாளர் டாக்டர், நோயாளிக்கு சிகிச்சை என்று மாண வியை அழைத்து, பெண் ஒருவருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என்று கூறி கொளத்தூர் அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். வழியில் குளிர்பானம் கொடுத்த டாக்டர், அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால் மாணவி மயக்கம் அடைந்தார். நீண்ட நேரம் கழித்து கண்விழித்தபோது இருவரும் ஆடை கள் இன்றி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, பின்னர் இதை தனது அக்காவிடம் கூறினார். உறவினர்கள் சென்று கேட்ட போது டாக்டர் மறுப்பு தெரிவித்தார். கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்ததையடுத்து, விசாரணையில் குற்றச் சாட்டில் உண்மை இருப்பது தெரிய வந்ததால் டாக்டர் கார்த்தி கேயன் கைது செய்யப்பட்டார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?