மன்னரும் மந்திரியும் உரையாடிக் கொண்டிருந்த நேரத்தில்
"மன்னா..மன்னா...மாமா..ன்..னா....ஆபத்து த்தூ....." என ஒற்றன் ஓடி வந்த வேகத்தில் தட்டி தடுமாறி மன்னரின் மேல் விழுந்து புரண்டு உருண்டான்
அய்யோ...அம்மா...
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என மன்னர் கதற உடனே மந்திரியார் பதறிப் போய் மன்னரை தூக்கி விட்டார் மந்திரி
"என்னய்யா....
நடக்குது இங்கே என் மேல் விழுந்தவன் இருக்கானா... செத்துப் போயிட்டானா....பாரு"
மன்னரின் மேல் விழுந்து சாகாமல் எழுந்தானா அவனுக்கு ஆயுசு கெட்டி மன்னருக்குத் தான்...என மந்திரியார் சொல்ல
"என்னய்யா..எனக்குத் தான் என்ன...?உன்னை அப்புறம் கவனித்துக் கொள்கிறேன்"
"என் மேல் விழுந்தவன் யாருன்னு பாக்குறேன்"
"டேய்...டேய்...விழுந்த சாக்குல கொரட்டை விடுறான் பாரு" "காலால் எட்டி உதைக்க"
"அய்யோ .மன்னா..
ஆபத்து....."என கத்த
"டேய் நீ?யாருன்னு சொல்லாம ஆபத்து ஆபத்துன்னு கத்துரே"
"மன்னா,அவன் நம் நாட்டு ஒற்றன் இவனைக் கூட தெரியாமல் இருக்கும் நீர்?எல்லாம் மன்னன்"
"அடிக்கடி என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறாய் எல்லாம் சேர்த்து பூஜை போட்டிர வேண்டியது தான்"
"ஒற்றனே..!நீ,சொல்லு "
"பக்கத்து நாட்டு மன்னன் கணல் பாண்டியன் போர் தொடுக்க வந்துட்டார் மன்னா,"
"கணல் பாண்டியன் வந்துட்டானா வீட்டில் கூட யாரிடமும் சொல்லாமல் வந்து விட்டேனே" என மந்திரியார் பதட்டப்பட
"பதட்டப்பட வேண்டியவன் நான் "
"நீங்கள் போர் புரிய வேண்டிய நேரத்தில் காணாமல் போய் விடுகிறீர்கள் நாங்க தானே சமாளிக்க முடியும்"என மந்திரி சொல்ல
"எப்படி சமாளிக்கிறீர்கள் பதுங்கு குழியில் ஓடியா"என மன்னர் சொல்ல
"அதெப்படி உங்களுக்கு தெரியும்"
"அதான்யா இந்த மாயவர்மனின் போர் தந்திரம்"
"ஒற்றனே! விரைந்து சென்று வீரர்களை போருக்கு தயாராகச்
சொல்லுங்கள் போர் முரசுக் கொட்டட்டும் ம்.. புறப்படுங்கள்"
என மன்னர் உத்தரவு போட
"மன்னா..."
"என்ன மந்திரியாரே"
"நம் படைவீரர்களுக்கு
ஆடித் திருநாளில் கிடாக்கறி சாப்பிட விடுமுறை அளித்து அனுப்பி விட்டோமோ"
"ஆமாம் ,இப்போது என்ன செய்வது"
"ஆடி முடிந்த பின் கணல் பாண்டியனை வரச் சொல்லலாமே
மன்னா"என மந்திரியார் சொல்ல
"ஆமாம் அப்படியே செய்திடுவோம்"
"ஒற்றா...நமது நூழை வாயிலில் விடுமுறை
பலகையை மாட்டி
விட்டு போருக்கு ஆடிமாதம் முடிந்ததும் வாருங்கள் என சொல்லி விடு"
மந்திரியாரே! கிட்டே வாரும் ஒரு ரகசியம் நம் வீரர்கள் ஆடிக்கு கிடாக்கறி சாப்பிடச் சென்றது எதிரி நாட்டு மன்னருக்கு தெரிய வேண்டாம் "
யாரிடமும் சொல்லாதீர்கள் ரகசியமாய் இருக்கட்டும் !
நல.ஞானபண்டிதன்
திருப்புவனம் புதூர்