முகமோ முழுமதி! குறுநகை அணியே!
நுதலோ பிறைநிலா! அமைதியே அழகே!
மீனிணை பெருவிழி தேனிணை அமுதினி! மதுர வாணி!
அருவியென குழலினி!
நறுமுகை வதனி நிறையிள மேனி!
மனமோகன ரூபிணி,யெளவன ராணி! சுக சொரூபினி!
கோளறு நாயகி, பிணியறு மாலினி
பகை கடி சூலினி, அருளான ஆழி நீ!
அறமான தேவி நீ! சிவனிட உமை நீ!
ஸ்ரீநிவாசினி, சுவாசினி, சுமதுர பாஷினி!
பிரமனது கலைவாணி நீ!
மஹா காளி நீ!
ஆனந்தராகினி! அமுத யோகினி!
வாராஹி! மாதவி, பூதேவி, ஸ்ரீதேவி,
பைரவி,நீலி, சூலி, அருளாயோ
தயாநிதி கருணை மழையே!
தயாபரி, பிழை பாராது ஆதரி எமை நீ! 🙏
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%