மகளிர் நலத் தொகை வழங்கும் தடுப்பு முயற்சி முறியடிப்பு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம்
Feb 18 2026
21
சிவகங்கை, பிப்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு திட்டத்தின் கீழ் கட் டப்பட்ட 52 புதிய குடியிருப்பு களை அமைச்சர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் பேசிய தாவது: கடந்த 5 ஆண்டுகளில் மாவட்டத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக 480 வீடு கள் கட்டி வழங்கப்பட்டுள் ளன. இது மனிதநேயத்தின் அடையாளமாக கருதப்பட வேண்டும். வாக்குரிமை இல்லாத இலங்கைத் தமி ழர்களுக்கே குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அர சின் திட்டங்கள் வாக்கு அர சியலுக்காக அல்ல என்பது தெளிவாகிறது என்றார். மேலும், மகளிர் உரி மைத் திட்டத்தின் மூலம் 1.31 கோடி பெண்களுக்கு ரூ. 5,000 வழங்கப்பட்டதாகவும், இதற்கான முடிவு போர்க் கால அடிப்படையில் ரகசி யமாக மேற்கொள்ளப்பட்டு பின்னர் முதல்வரால் அறி விக்கப்பட்டதாகவும் தெரி வித்தார். ரூ.1,000 வழங்குவதைத் தடுக்க சிலர் முயன்றாலும், “முடிந்தால் தடுத்து பார்க்க லாம்” என்ற வகையில் ரூ. 5,000 வழங்கி முதல்வர் நிர் வாக திறனை வெளிப்படுத்தி யுள்ளார் என்று அமைச்சர் கூறினார். ரேசன் அட்டைதாரர் களுக்கு நிதி வழங்க முடி யாது என முன்பு கூறியவர் கள் தற்போது அதிக தொகை வழங்குவதாக அறிவிப்ப தாகவும், மக்கள் அதை நம்ப மாட்டார்கள் என்றும் கூறுவ தாக அமைச்சர் தெரிவித் தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?