போதை ஸ்டிக்கர், போதை மாத்திரை, கஞ்சா ஆயில் என போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கும்பல் கைது

போதை ஸ்டிக்கர், போதை மாத்திரை, கஞ்சா ஆயில் என போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கும்பல் கைது

சென்னை: ​

சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனை​யில் ஈடு​படு​பவர்​களை கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்​படை​யினருடன் போதை பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸாரும் ஒருங்​கிணைந்து கண்காணித்து வருகின்றனர்.


இதன் தொடர்ச்​சி​யாக, போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு தனிப்​படை​யினர் மற்​றும் மதுர​வாயல் போலீ​ஸார் நேற்று முன்​தினம் மாலை, மதுர​வாயல், காமாட்சி நகர் 2-வது மெயின் ரோட்​டில் கண்​காணித்​தனர்.


அப்​போது, அங்கு சட்​ட​விரோத​மாக போதைப் பொருட்​கள் வைத்​திருந்த மதுர​வாயல் வசந்த் (23), ஆகாஷ் (24), அருண் பரிஷித் (27) பவேஷ் (21), காரனோடை கார்த்​திக் (27), முகப்​பேர் கிழக்கு கவுதம் (28), சிதம்​பரம் அம்​மாபேட்டை ராஜ்கு​மார் (27), செங்​குன்​றம் தினேஷ்கு​மார் (24), சூளைமேடு திவாகர் (27), கீழ்ப்​பாக்​கம் ரூபன் (26) ஆகிய 10 பேரை பிடித்து விசா​ரித்​தனர்.


அப்​போது, அவர்​கள் முன்​னுக்​குப் பின் முரணாக பதில் அளித்​தால், அவர்​களின் உடைமை​களை சோதித்​த​போது அதற்​குள் போதை ஸ்டாம்​பு, போதை மாத்​திரைகள், உயர் ரக கஞ்சா ஆயில் உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான போதைப் பொருட்​களை மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.


இவற்றை விற்​பனை செய்ய முயன்​ற​போது அவர்​களை அடை​யாளம் கண்​டு, போலீ​ஸார் அவற்றை பறி​முதல் செய்து 10 பேரை​யும் கைது செய்​தனர். தொடர்ந்​து வி​சா​ரணை நடை​பெற்​று வரு​கிறது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%