பேராசை பெரும் நஷ்டம்

பேராசை பெரும் நஷ்டம்


முல்லா ஒரு நாள் பக்கத்துக் வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை கடனாகக் கேட்டார். பக்கத்துக் வீட்டுக்காரர் கொடுக்க மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார். அடுத்த நாள் காலையில், உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது. நேற்று பிரசவம் முடிந்து, உங்கள் பானை ஒரு குட்டி பானையை ஈன்றெடுத்தது எனச்சொல்லிப் பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையைப் பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா.


பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக இருந்தாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்துவிட்டார். அதே போல் மீண்டும் அவரிடமிருந்து ஒரு பெரிய பானையை கடனாக வாங்கி மறுநாள் அதே போல் அந்தப் பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப்பானை ஒன்றைக் கொடுத்து அந்த பெரிய பானைக்கு புதிய குழந்தை பிறந்திருக்கிறது என்று கொடுத்தார்.


அதனைப் பெற்றுக்கொண்ட பக்கத்துவீட்டுக்காரர் சந்தோஷம் அடைந்தார். அதற்கடுத்த வாரம் முல்லா பக்கத்து வீட்டுக்காரரிடம், பானையை கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையைக் கொடுத்தார். இம்முறை முல்லா பானையை திருப்பித் தரவில்லை. பக்கத்துவீட்டுக்காரர் முல்லாவிடம் போய் கேட்டார். அதற்கு முல்லா மன்னிக்க வேண்டும். உமது பானை பிரசவத்தின் போது இறந்து விட்டது என்றார். உடனே பக்கத்து வீட்டுக்காரர் என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? என்று கேட்டார்.


அதற்கு முல்லா நான் ஏமாற்றவில்லை. பானை கர்ப்பமாக இருந்து குட்டிப் போட்டது என்று நான் உங்களிடம் குட்டிப்பானையைக் கொடுத்தபோது வாங்கிக் கொண்டீர்கள் அல்லவா? என்றார். அது உண்மை என்றால் இப்போது பானை இறந்தது என்பதும் உண்மை என்றார். பக்கத்து வீட்டுக்காரர் எதுவும் பேசமுடியாமல் அங்கிருந்து சென்றார்.



 Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%