பெண்ணின் வாக்காளர் அட்டையில் பீகார் முதலமைச்சர் படம்

பெண்ணின் வாக்காளர் அட்டையில் பீகார் முதலமைச்சர் படம்

பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் மாதேபுரா பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷா குமாரி (30). இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் இருந்த முகவரியை மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு கிடைத்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி சரி யாக மாற்றப்பட்டிருந்தாலும், அபிலா ஷாவின் புகைப்படத்திற்குப் பதிலாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமா ரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து வாக்குச்சாவடி நிலைய அதிகாரியிடம் அபிலாஷா குமாரி முறை யிட்டுள்ளார். இதற்கு வாக்குச்சாவடி நிலைய அதிகாரி,”இந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் அமைதியாக இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது” என மிரட்டும் பாணியில் கூறியுள்ளார். வாக்குச்சாவடி நிலைய அதிகாரி கூறியதை அபிலாஷா குமாரி செய்தி யாளர்கள் சந்திப்பில் விரிவாகக் கூற, வாக்காளர் அடையாள அட்டையின் தரவு மேலாண்மையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. பீகார் பாஜக கூட்டணி அரசு நிர்வாகத் திற்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கண்ட னத்தை தொடர்ந்து பீகார் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%