பெண்களின் அஸ்த்திரங்கள்

பெண்களின் அஸ்த்திரங்கள்



  " பெண்கள் படிப்பும் வேலையும் சொந்தக் காலில் நிற்கின்ற தைரியமும் ஒரு பக்கம் பெண்கள் சமுதாயத்திற்கு மா பெரும் வெற்றி தான் . ஆனால் மறுபக்கம் பெரிய ஈடு செய்ய முடியாத தோல்வி மறைந்து இருக்கிறது என்றார் மகாதேவன் தன் மனைவி ஆசிரியை சரஸ்வதியிடம் அழுத்தமாக .


      மகாதேவன் பெண்கள் வளர்ச்சி துறையின் பெரிய அதிகாரி . சர்வே எடுப்பதில் வல்லவர் .


     பெண்கள் வெற்றி நல்லா கண்ணுக்கு தெரியுது மறுபக்கம் தோல்வின்னு சொல்றீங்களே அது எப்படி என்று கேட்டாள் சரஸ்வதி .


   சின்னப் பெண்கள் வயதும் அவர்களது பருவமும் ஒரு காரணம். காசும் பணமும் இருக்கிற தெம்பு கண்ணை மறைக்கும் காமம் தனிமை கொடுத்த விலை காதல் . காதல் வலையில் சிக்கி வாழ்க்கை பாழாக போகிறது சரஸ்வதி என்று முடித்தார் மகாதேவன் .


    எப்படிங்க எனக்கு புரியா மாதிரி உங்க சர்வே ரிப்போர்ட்டை சொல்லுங்க என்றாள் சரஸ்வதி .


      சொல்றேன் கேளு சரஸ்வதி , பல பெண் பிள்ளைகள் முடிவும் எடுக்க முடியாமல் பெற்றோர்களின் பேச்சுக்கு செவி சாய்க்கவும் முடியாமல் கண்மூடித்தனமாக காதலன் பக்கம் சாயவும் முடியாமல் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் சரஸ்வதி என்றார் மகாதேவன் .


     பெண்கள் வளர்ச்சி அவர்களுக்கே ஆபத்தாக முடிகிறதா ...?" அதை தடுக்க என்ன வழி சொல்லுங்க என்று கேட்டாள் சரஸ்வதி .


     சொல்றேன்ம்மா, பாதுகாப்பான பயணம் , தவிர்க்க வேண்டிய இரவுப் பயணம் ,தேவை இல்லாமல் வெளியில் சென்று இரவு உணவு எடுப்பது , நிரந்தரப் பணி , தனிமையை விரட்டும் உறவுகள் , வேண்டாத தனி மனம் விரும்பும் சுற்றுலா பயணம், மன பாரத்தை பகிர்ந்து கொள்ள நல்ல நண்பர்கள் .


     தாய் தந்தையரிடம் ஒளி மறைவு இல்லாத பேச்சு , தேவைக்கு தான் பணம் ஆடம்பர செலவுகளுக்கு இல்லை என்கிற உறுதியான எண்ணம் அழுத்தமா வேணும் அவ்வளவு தான் சரஸ்வதி பெண்கள் சமுதாயம் ஆல் ரைட் ஆயிடும் என்றார் மகாதேவன் .


       எவ்வளவு அழகா பெண்கள் பாதுகாப்பு எதிர்கால இலக்கு இருக்கனும்ன்னு சொல்லிட்டாரே இதை புரிந்து கொண்டு இந்தக் கால ஹைடெக் இளம் பெண்கள் போவார்களா என்று தன் பெண் குழந்தை சரளா தலையில் கையை வைத்து யோசித்தாள் சரஸ்வதி.


       இனி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு இப்போது இருக்கும் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு தனிப் பாடமா வகுப்பில் கற்பிக்க வேண்டும் என்று உறுதியாய் சொல்லிய படி செயலில் ஈடுபட தொடங்கினாள் ஆசிரியை சரஸ்வதி தன் வகுப்பு மாணவிகளுக்கு முதல் அனுபவ பாடம் எடுக்கவும் தொடங்கி விட்டாள் .


     இனி பெண்கள் எதிர்காலம் பலம் தான் .


- சீர்காழி .ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%