புரியாமல் கற்பதற்கா கல்வி

புரியாமல் கற்பதற்கா கல்வி


பாவலர் கருமலைத்தமிழாழன்


பெண்குழந்தை எனத்தாழ்வாய் நினைத்த தாலே

பெற்றோர்கள் அரசாங்கம் நடத்து கின்ற

மண்வாசத் தமிழ்க்கல்வி பள்ளி தன்னில்

மகள்தன்னைச் சேர்த்தார்கள் படிப்ப தற்கே

கண்போன்ற தாய்தமிழில் கற்ற தாலே

கற்பதிலே சிரமமின்றிப் புரித லோடு

கண்முன்னே காண்கின்ற இயற்தை போல

கல்விதனை மகிழ்ச்சியுடன் கற்றுத் தேர்ந்தாள் !


தன்மகனை உயர்வென்றே ஆங்கி லத்தில்

தரும்கல்விப் பள்ளிதன்னில் கற்கச் சேர்த்தார்

முன்பின்னே உடுக்காத உடையு டுத்தி

முழுப்பாதம் தெரியாமல் செருப்பைப் பூட்டிச்

சின்னதாக வீட்டின்முன் வந்து நிற்கும்

சிற்றுந்தில் அமரவைத்துக் கைய சைத்தே

நன்றாக வீட்டினிலே பேசி வந்த

நற்றமிழை மறப்பதற்கே பணத்தைத் தந்தார் !


அப்பாவை டாடியென்றார் எதற்காம் என்றான்

அம்மாவை மம்மியென்றார் ஐயம் கொண்டான்

தப்பான இடத்திற்கு வந்தோ மென்ற

தவிப்போடே அச்சத்தில் மிரண்டு போனான் !

எப்போதும் பேசுகின்ற தமிழை விட்டே

ஏதோவோர் மொழியினிலே நாளும் பார்க்கும்

இப்பகுதி காட்சிகளைச் சொல்லும் போதோ

இவனேதும் புரியாமல் விழ்க்க லானான் !


உள்ளத்தில் தெளிவோடும் மகிழ்ச்சி யோடும்

உடன்பிறந்த அக்காபோல் படிப்ப தற்கோ

எள்ளளவும் முடியாமல் தவிக்க லானான்

எழிற்கல்வி வேம்பாக ஒதுக்க லானான் !

பள்ளத்தில் பிடித்தவனைத் தள்ளி விட்டுப்

பாரவனோ துரைபோல வருவா னென்று

புள்ளிபோட்ட பெற்றோரும் ஏமாந் தார்கள்

புரிந்தினிமேல் தாய்மொழியில் தருவோம் கல்வி !


புரியாமல் கற்பதற்கா கல்வி

பாவலர் கருமலைத்தமிழாழன்


பெண்குழந்தை எனத்தாழ்வாய் நினைத்த தாலே

பெற்றோர்கள் அரசாங்கம் நடத்து கின்ற

மண்வாசத் தமிழ்க்கல்வி பள்ளி தன்னில்

மகள்தன்னைச் சேர்த்தார்கள் படிப்ப தற்கே

கண்போன்ற தாய்தமிழில் கற்ற தாலே

கற்பதிலே சிரமமின்றிப் புரித லோடு

கண்முன்னே காண்கின்ற இயற்தை போல

கல்விதனை மகிழ்ச்சியுடன் கற்றுத் தேர்ந்தாள் !


தன்மகனை உயர்வென்றே ஆங்கி லத்தில்

தரும்கல்விப் பள்ளிதன்னில் கற்கச் சேர்த்தார்

முன்பின்னே உடுக்காத உடையு டுத்தி

முழுப்பாதம் தெரியாமல் செருப்பைப் பூட்டிச்

சின்னதாக வீட்டின்முன் வந்து நிற்கும்

சிற்றுந்தில் அமரவைத்துக் கைய சைத்தே

நன்றாக வீட்டினிலே பேசி வந்த

நற்றமிழை மறப்பதற்கே பணத்தைத் தந்தார் !


அப்பாவை டாடியென்றார் எதற்காம் என்றான்

அம்மாவை மம்மியென்றார் ஐயம் கொண்டான்

தப்பான இடத்திற்கு வந்தோ மென்ற

தவிப்போடே அச்சத்தில் மிரண்டு போனான் !

எப்போதும் பேசுகின்ற தமிழை விட்டே

ஏதோவோர் மொழியினிலே நாளும் பார்க்கும்

இப்பகுதி காட்சிகளைச் சொல்லும் போதோ

இவனேதும் புரியாமல் விழ்க்க லானான் !


உள்ளத்தில் தெளிவோடும் மகிழ்ச்சி யோடும்

உடன்பிறந்த அக்காபோல் படிப்ப தற்கோ

எள்ளளவும் முடியாமல் தவிக்க லானான்

எழிற்கல்வி வேம்பாக ஒதுக்க லானான் !

பள்ளத்தில் பிடித்தவனைத் தள்ளி விட்டுப்

பாரவனோ துரைபோல வருவா னென்று

புள்ளிபோட்ட பெற்றோரும் ஏமாந் தார்கள்

புரிந்தினிமேல் தாய்மொழியில் தருவோம் கல்வி !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%