புதுக்கவிதைகள்....

புதுக்கவிதைகள்....

 


1. பொய் பேசும் வாய்க்கு நண்பர்கள் 

அதிகம்

உண்மை பேசும் வாய்க்கு 

எதிரிகள் அதிகம்



2. எந்தப் பிரச்சனையும் இல்லாமல் 

ஜெயித்தால் அது வெற்றி

ஏராளமான பிரச்சனைகளை

கடந்து ஜெயித்தால் அது வரலாறு



3. யாரையும் எதிர்பார்த்து வாழாதீர்கள்

வெளிச்சம் கூட நிழல் இருக்கும் வரை தான் நம்மோடு வரும்



4. நம்பிக்கை நிறைந்த ஒருவர் 

யாரிடமும் மண்டியிடுவது இல்லை



5. இறப்பதற்கு வாய்ப்பு உள்ளது 

என்று தெரிந்தும்

பிறப்பிற்கு வித்திடும் தைரியசாலி 

பெண் .



6. வெட்டப்படும் மரங்களின் கவலை

வெட்டும் கோடாலி யின் கைப்பிடி நம் இனத்தவரே என்ற கவலை தான்



7. ஏமாந்து விட்டோம் என்று கவலை கொள்ளாதீர்கள்

யாரையும் ஏமாற்றி பிழைக்கவில்லை 

என கர்வம் கொள்ளுங்கள்



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%