
பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான மார்ஷெல் நகரில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மார்சேய் நகரத்தின் மேயர் பெனாய்ட் பயான் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மார்சேய் நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாயன்று ஏற்பட்ட காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பிரான்ஸின் 2வது மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான மார்ஷெல்லே விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரான்ஸின் பவுசஸ்-டு-ரோனி, வார் மற்றும் வாகுளூரு ஆகிய 3 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வீடுகளிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
காட்டுத்தீயை அணைக்க 700-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் 220 தீயணைப்பு வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர்கள், நீர் தெளிக்கும் விமானங்களும் சம்பவ இடத்தில் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர். 700 ஹெக்டேர்கள் பரப்பிலான நில பகுதிகள் தீயில் எரிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதடைந்துள்ளன.
மேலும், 400 பேர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 63 வீடுகள் சேதடைந்துள்ளன. காட்டுத் தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்கள் உள்பட 100 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?