
சோலோ:
ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தன்வின் ஷர்மா, வெண்ணால கலகோட்லா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்தோனேஷியாவின் சோலோ நகரில் ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 13-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் யின் யி குயிங்கிடம் தோல்வி அடைந்தார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான வெண்ணால கலகோட்லா 15-21, 18-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லியு ஷி யாவிடம் வீழ்ந்தார். அரை இறுதியில் தோல்வி அடைந்த தன்வி ஷர்மா, வெண்ணால கலகோட்லா ஆகியோர் வெண்கலப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?