
அறிந்தோர் மூலம் விசாரித்தோம்
செல்வச் சிறப்பென மகிழ்ந்தோம்
பத்துப் பொருத்தமும் ஒத்துப்
போவதில் குறியாய் நின்றோம்
சாதியைத் துருவி ஆராய்ந்தோம்
சீர் செய்வதில் வஞ்சனையில்லை
குலதெய்வ உத்தரவு கேட்டோம்
பச்சைக் கொடியே காட்டியது
உத்தியோகம் புருஷ லட்சணம்
என்பதில் கவனக் குறைவு
மாப்பிள்ளை குணநலன்களில்
அலட்சியம் காட்டி விட்டோம்
மீளாத் துயரில் ஆழ்ந்திட்டோம்
-பி. திலகவதி,
சென்னை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%